நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து ஒன்பதாம் திருவாய்மொழி - பாடல் 6

வேதங்களிலே வல்லவர்கள்

செ.குளோரியான்

பாடல் 6

வேள்வியுள் மடுத்தலும், விரை கமழ் நறும் புகை,
காளங்கள், வலம்புரி கலந்து எங்கும் இசைத்தனர்,
ஆளு,மின்கள் வானகம் ஆழியான் தமர் என்று
வாள் ஒண் கண் மடந்தையர் வாழ்த்தினர் மகிழ்ந்தே.

வேதங்களிலே வல்லவர்கள் தாங்கள் செய்த வேள்விகளின் பலன்களை எம்பெருமான் அடியவர்களுக்குச் சமர்ப்பித்ததும், சிலர் நறுமணம் கமழ்கிற நல்ல புகையை எங்கும் பரப்பினார்கள், வேறு சிலர், காளங்கள், வலம்புரிச் சங்குகளை எங்கும் இசைத்தார்கள், வாள்போன்ற, ஒளிநிறைந்த கண்களையுடைய பெண்கள், ‘சக்ராயுதத்தை ஏந்திய எம்பெருமானுடைய அடியவர்களாகிய நீங்கள் வானகத்தை ஆளுங்கள்’ என்று மகிழ்ந்து வாழ்த்தினார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பெரம்பலூரில் மூதாட்டியிடம் தாலிக்கொடி பறிப்பு

நமோ பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி - புகைப்படங்கள்

இந்திய அணிக்கு மோசமான தோல்வி; அபார வெற்றியைப் பதிவு செய்த தென்னாப்பிரிக்கா!

ஆப்கானிஸ்தானில் எல்லை தாண்டி பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கடும் கண்டனம்!

தங்கத் தேரழகு துஷாரா விஜயன் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT