நாட்டு வைத்திய களஞ்சியம் -கொ.மா.கோதண்டம்; பக்.304; ரூ.175; நிவேதிதா பதிப்பகம், சென்னை-94; 99628 96884.
"எடுத்ததற்கெல்லாம் ஊசி மாத்திரை என்று ஓடாமல், ஒரு தலைவலிக்குக் கூட ஐம்பது, நூறு என்று செலவு செய்யாமல், வீட்டு அருகில் முளைத்திருக்கும் துளசி போன்ற செடிகளின் இலைகளாலும், வீட்டில் இருக்கின்ற சுக்கு, மிளகு போன்றவற்றினாலும் நமக்கு நாமே எளிய முறையில் செய்து கொள்ள உதவும் இனிய மருத்துவமே, மூலிகை மருத்துவம்' என்று சொல்கிற நூலாசிரியர், இந்நூலில், சித்த மருத்துவ அடிப்படையில் பல்வேறு நோய்களுக்கு எளிமையான மருத்துவத்தைச் சொல்லியிருக்கிறார்.
தலைவலி, வயிற்று வலி, காது வலி, வாயுத்தொல்லைகள், நரம்புத் தளர்ச்சி, பெண்களின் நோய்கள், குழந்தைகளின் நோய்கள் போன்ற பல நோய்களை மூலிகைகளின் துணையோடு எவ்வாறு விரட்டியடிக்கலாம் என்பதை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். "தலைவலிக்கு மாத்திரைகளைத் தேடாமல் இரண்டு துளி வெற்றிலைச் சாறை மூக்கில் விட்டால் போதும்', "பாலில் பூண்டைச் சேர்த்து உண்டு வர இரத்தக் கொதிப்பு குணமாகும்' என்பன போன்ற எளிய மருத்துவக் குறிப்புகள் நிறைந்துள்ளன. மருந்துகளைச் சுத்தி செய்யும் முறைகள், நாட்டு மருந்துகளின் மருத்துவ குணங்கள் போன்றவற்றையும் விளக்குகிறார். மருத்துவம் செய்து கொள்வது அதிகச் செலவு பிடிக்கும் ஒன்றாக ஆகிவிட்ட இக்காலத்தில், மிகக் குறைந்த செலவில் எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமல் உடல் நோய்களை நீக்கிக் கொள்ள உதவும் சிறந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.