நூல் அரங்கம்

பழமொழி மருத்துவம்

'எல்லாப் பழமொழிகளும் ஏதோ தம்முள் வைத்திருக்கின்றன' என்ற பழமொழிக்கு இந்நூல் வலு சேர்கிறது.

தினமணி செய்திச் சேவை

பழமொழி மருத்துவம் - தமிழ்ப்பரிதி மாரி; பக்.252; ரூ.300; தென்றல் பதிப்பகம், 146, திருச்சி முதன்மைச் சாலை, தாதகாப்பட்டி, சேலம் - 636006. ✆ 9944117717

உடல்நலம், மருத்துவம், மூலிகை, வாழ்க்கை முறை குறித்து பன்னெடுங்காலமாகப் பழமொழிகளின் வழியே வழக்கத்தில் இருந்த செய்திகளை 87 தலைப்புகளில் இந்நூல் விவரிக்கிறது.

'மூலிகை அறிந்தால் மூன்று உலகமும் ஆளலாம்' என்பது பழமொழி. தொட்டதெற்கெல்லாம் மருத்துவர், மருந்து, மாத்திரை என்று நிவாரணம் தேடும் இன்றைய நவீன உலகில் மூலிகைகளின் மகத்துவத்தை எடுத்துரைக்கிறது இப்பழமொழி.

இதுபோல, மக்களின் நல்வாழ்வைப் பேசும் 3,000-க்கும் மேற்பட்ட பழமொழிகளை இத்தொகுப்பின் வாயிலாக அளித்திருப்பது ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டுவதோடு மட்டுமல்லாது அரிய தமிழ்ப்பணியுமாகும். பழமொழி என்னும் சொல்லினைக் குறிக்கும் வகையில் தமிழ்நாட்டில் 34 சொற்கள் வழக்கத்தில் உள்ளன என்னும் தகவல் வியப்பூட்டுகிறது.

இந்நூலில் இடம்பெற்றுள்ள பழமொழிகள் மிக எளிதாக நேர்ப்பொருள் கொண்டவையாகவோ, மறைபொருள் கொண்டவையாகவோ, ஒரு பகுதி மக்களுக்கு மட்டும் புரியும் வகையிலோ அமைந்துள்ளன. அவை தெரிவிக்கும் கருத்துகளை உணர்ந்து, கடைப்பிடித்தால் உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மருத்துவச் செலவுகளை அறவே குறைத்து, நோயற்ற வாழ்க்கையையும், குறைவற்ற செல்வத்தையும் பெற முடியும்.

ஒவ்வொரு தலைப்பின் நிறைவிலும் அத்தலைப்பையொட்டி தமிழக அளவிலும், உலகளாவிய அளவிலும் புழக்கத்தில் உள்ள பழமொழிகளை தொகுத்து அளித்திருப்பது போற்றத்தக்கது.

'எல்லாப் பழமொழிகளும் ஏதோ தம்முள் வைத்திருக்கின்றன' என்ற பழமொழிக்கு இந்நூல் வலு சேர்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பள்ளியில் நாடக மேடை கட்டடம் திறப்பு

லாரி உரிமையாளா் மா்ம மரணம்: உறவினா்கள் சாலை மறியல்

மதுப் புட்டிகளை விற்க முயன்ற இருவா் கைது

ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் குடமுழுக்கு: ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

தேனியில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

SCROLL FOR NEXT