செந்நாப் புலவர் கபிலர் அருளிய குறிஞ்சிப்பாட்டு ஆய்வுரை-முனைவர் ம.திருமலை; பக்.128; ரூ.125; மீனாட்சி புத்தக நிலையம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை - 625 00; ✆ 99421 76893
'குறிஞ்சிப்பாட்டு' சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டு என்னும் தொகுப்பில் அடங்கியது. இது 261 அடிகளால், குறிஞ்சித் திணையை மையமாகக் கொண்டு, 'அறத்தொடு நிற்றல்' துறையில் 'தோழி கூற்றாக' அமைந்த அகப்பாடல்.
இந்நூல் குறிஞ்சிப்பாட்டின் திணை, துறை அமைப்பு, பாட்டின் அழகுமிகு கட்டமைப்பு, கபிலர் குறித்த செய்திகள், பாட்டின் சுருக்கம், மூலம் மற்றும் மூலமும் ஆய்வுரையும் என சிறந்ததொரு ஆய்வுப் பார்வையுடன் எழுதப்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாட்டை 'உளவியல் பாட்டு' என்று புகழ்வார் பேராசிரியர் தமிழண்ணல். இதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்ட ஜே.வி.செல்லையா, 'குறிஞ்சிப்பாட்டின் எடுத்துரைப்பு முறை வாசகரை ஈர்ப்பதாகவும், உயிர்ப்புள்ளதாகவும் அமைந்திருக்கிறது' என்கிறார். பதிப்பித்த
உ.வே.சா., 'அதன் இறுதியில் காணப்பட்ட ஆரிய அரசன் பிரகத்தனை தமிழ் அறிவித்ததற்கு கபிலர் பாடிய குறிஞ்சிப்பாட்டிற்கு மதுரை ஆசிரியர் பாரத்து
வாசி நச்சினார்க்கினியர் செய்த உரை முற்றிற்று' என்ற தொடரையும் சேர்த்துப் பதிப்பித்துள்ளார்.
இதனால், குறிஞ்சிப்பாட்டு என்ற பெயர், அதைப் பாடிய புலவர், யாருக்காக, எதன் பொருட்டு பாடப்பட்டது போன்ற தகவல்கள் குறிப்பிடப்படுகின்றன.
குறிஞ்சி நிலத்தில் பூத்த 99 வகையான மலர்களின் பெயர்கள் குறிஞ்சிப்பாட்டில் (வரிகள் 61-98) குறிப்பிடப்பட்டுள்ளன. இது தமிழ் இலக்கியத்தில் வேறு எங்கும் இல்லாத சிறப்பாகும்.
இப்பாட்டு தமிழரின் மரபார்ந்த இயற்கை அறிவு, மலை நிலத்தின் இயற்கை அழகு, பறவைகள், விலங்குகள், மரங்கள், காதல், கற்பு வாழ்வு, முருகன் வழிபாடு ஆகியவை மிகமிக நுணுக்கமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதற்கு பெருங்குறிஞ்சி, கோல் குறிஞ்சி, களவியல் பாட்டு என வேறு பெயர்களும் உள்ளன.
காதல் வாழ்வே பெருவாழ்வு என்பது குறிஞ்சிப்பாட்டின் அடிநாதம். அதற்கு இதயம் கொடுத்தவர் குறிஞ்சிக் கபிலர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.