தமிழா... நீ முன்னோடி! - முனைவர் இதயகீதம் இராமானுசம்; பக்.202; ரூ.200; கனவுத்தமிழ் பதிப்பகம்; சென்னை-131; ✆ 98403 21522.
இலக்கியப் படைப்புகள் பலவற்றை அளித்துள்ள நூலாசிரியர் தமிழ், தமிழர்களின் சிறப்புகள் குறித்தும் எழுதியுள்ள நூல் இது.
'அறிவாலும் ஆற்றலாலும் உலகை தன்மயமாக்கியவன் தமிழன். உலக நாகரிகத்துக்கும் பண்பாட்டுக்கும் அவனே முன்னோடி' என்று கூறுவதோடு நின்றுவிடாமல், அதற்கான உதாரணங்களைச் சான்றுகளுடன் எடுத்துரைக்கிறார். 'அதனால்தான் தொன்மை வாய்ந்த மொழிகள் பல அழிந்தபோதும் தன்னிளமை குன்றாமல் தமிழின் மேலாண்மை பின்னிக் கிடைக்கிறது' என்கிறார். 'உலக அரங்கில் தமிழர்கள் மேன்மையடைய வேண்டும் என்றும் நாடு, நாட்டுப் பற்று, தமிழ்ப் பற்று ஆகிய மூன்றும் அவசியம்' என்று எடுத்துரைக்கிறார்.
'தொப்பையை வளர்க்காதே! அது குப்பைத் தொட்டி' என்றும், தமிழர்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த வேண்டும் என்றும் 'வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்; வாசல்தோறும் வேதனை இருக்கும்' என்று அன்றாட வாழ்க்கை குறித்து கண்ணதாசனின் வரிகளைச் சொல்லி தன்னம்பிக்கையை மேம்படுத்த வேண்டும் என்றும், சங்க காலம் முதல் நவீன காலம் வரையில் சமூக அடிப்படையிலும், பண்பாடு, நாகரிகத்தின் அடிப்படையிலும் தமிழர்கள் வளர்ந்துள்ளது எப்படி? என்பது குறித்தும் நூலாசிரியர் எடுத்துரைக்கிறார்.
தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலின் சிறப்புகளை எடுத்துரைக்கும் நூலாசிரியர், அதன் உள்பொருள்களைச் சிறப்பாகப் பட்டியலிடுகிறார். இதோடு, தமிழ் இலக்கியங்களின் சிறப்புகளை அள்ளித்தருகிறார்.
திருக்குறள், நாலடியார், புறநானூறு, மணிமேகலை, ஏலாதி போன்றவை குறித்து வித்தியாசமான முறையில் அலசுகிறார். கண்ணதாசன், கவிமணி, பாரதிதாசன் போன்ற இலக்கியவாதிகளின் சிந்தனைகள் வியக்க வைக்கும் அளவுக்குத் தகவல்களை அள்ளித் தருகிறார்.
தமிழர்களின் கலை, இலக்கியம், பண்பாடு, நாகரிகம், அறிவியல், ஆன்மிகம், மனிதநேயம், உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ் சிறந்தோங்கியுள்ளதை விளக்குகிறது இந்த நூல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.