முகப்பு
தினம் ஒரு தேவாரம்

22. கடவுளைக் கடலுள் எழு - பாடல் 4

அரப்பு = விளையாட்டு, தான் செய்யும் ஐந்து தொழில்களையும், எந்த விதமான முயற்சியும் இன்றி, நினைத்த மாத்திரத்தில் செய்ய வல்லவன் இறைவன். இறைவன் விளையாட்டாக இந்த

Updated On : 19 ஏப்ரல், 2016 at 12:50 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:34 PM

பாடல் 4

பரப்பு ஒப்பானைப் பகல் இருள் நன்னிலா
இரப்பு ஒப்பானை இளமதி சூடிய
அரப்பு ஒப்பானை அரத்துறை மேவிய
சுரப்பு ஒப்பானைக் கண்டீர் நாம் தொழுவதே

விளக்கம்

சுரப்பு = சுரக்கும் இடம், ஊற்று. பகல் என்ற சொல்லினை பரப்பு என்ற சொல்லுக்கு முன்னே வைத்து பகல் பரப்பு ஒப்பான் என்று பொருள் கொள்ள வேண்டும். பகலில் காணப்படும் சூரியனின் பேரொளி, பரந்த இடம் அனைத்திலும் ஒன்றுபோல் தோன்றும். இரப்பு என்பதற்கு இரத்தலால் வரும் வளர்ச்சி, ஆக்கம் என்று பொருள். ஒருவன் பல இடங்களிலும் சென்று இரக்கும்போது படிப்படியாக அவனுக்கு கிடைக்கும் பொருட்கள் அதிகரிப்பது போன்று, நிலவின் வளர்ச்சியும் படிப்படியாக வளர்பிறையில் உள்ளது. இறைவன் உயிர்களுக்கு அருள் புரியும் கருணைத் தன்மை இரண்டுவிதமாகவும் காணப்படுகின்றது. பேரொளியாக எங்கும் நிறைந்து நிற்பதும் அவனது தன்மை: உயிர்களின் அறியாமையை அகற்றி படிப்படியாக சிவஞானத்தை வளரச் செய்தலும் அவனது பண்பு. பாரிக்கும் என்றால் வளர்த்தல் என்று பொருள். இரப்பு ஒப்பான் என்ற கருத்தையே மணிவாசகர் பாசமாம் பற்று அறுத்து பாரிக்கும் ஆரியனே என்று சிவபுராணத்தில் கூறுகின்றார்.

அரப்பு = விளையாட்டு, தான் செய்யும் ஐந்து தொழில்களையும், எந்த விதமான முயற்சியும் இன்றி, நினைத்த மாத்திரத்தில் செய்ய வல்லவன் இறைவன். இறைவன் விளையாட்டாக இந்த தொழில்களைச் செய்வதை மணிவாசகர் திருவெம்பாவை பதிகத்தில், காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி என்று கூறுகின்றார். ஆர்த்த = பிணைத்துள்ள. ஆர்த்து ஆடும் = ஆரவாரம் செய்தவாறு நீராடும். புனித தீர்த்தங்கள், அவைகளில் முழுகிக் குளிக்கும் மனிதர்களின் பாவங்களைக் களைவது போன்று, நமது மாசுகளைக் களைந்து, மலங்களின் பிடியிலிருந்து நம்மை மீட்பவன் என்பதால் இறைவனை தீர்த்தன் என்று இங்கே கூறுகின்றார்.

ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்

தீர்த்தன் நல் தில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்

கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்லோமும்

காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி

வார்த்தையும் பேசி வளை சிலம்ப வார் கலைகள்

ஆர்ப்பரவம் செய்ய அணிகுழல் மேல் வண்டார்ப்பப்

பூத்திகழும் பொய்கை குடைந்து உடையான் பொற்பாதம்

ஏத்தி இருஞ்சுனை நீராடேல் ஓர் எம்பாவாய்

விளையாட்டாக ஐந்து தொழில்களையும் செய்பவன் இறைவன் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுவது, வேறொரு பதிகத்தில் விளையாட்டாக பெருமான் செய்வதாக சொல்லும் மற்றொரு செயல் நமது நினைவுக்கு வருகின்றது. சந்திரனை மாகங்கை என்று தொடங்கும் பதிகத்தின் ஒரு பாடலில் (6.4.7) திருவிரலால் கரணம் செய்பவன் என்று சிவபெருமானை குறிப்பிடுகின்றார். கரணம் செய்தல் = அசைத்தல் இயக்குதல். அனைத்து உயிர்களுடன் கலந்திருந்து அந்த உயிர்களை இயக்குபவன் சிவபெருமான் என்பது சைவ சித்தாந்தக் கொள்கை. இந்த செயலை எவ்வளவு எளிதாக பெருமான் செய்கின்றார் என்பதை நமக்கு அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார். தனது கால் விரல்களை அசைப்பது போன்று எளிய செயலாக அனைத்து உயிர்களையும் பெருமான் இயக்குகின்றார் என்று இங்கே கூறுகின்றார். விரல் அசைப்பதைவிட எளிய செயல் வேறு ஏதேனும் உண்டோ?

குழலோடு கொக்கரை கைத் தாளம் மொந்தை குறட் பூதம் முன் பாடத் தான் ஆடும்மே

கழலாடு திருவிரலால் கரணம் செய்து கனவின் கண் திருவுருவம் தான் காட்டும்மே

எழிலாரும் தோள் வீசி நடமாடும்மே ஈமப் புறங்காட்டில் ஏமம் தோறும்

அழலாடுமே அட்ட மூர்த்தியாமே அவனாகில் அதிகை வீரட்டனாமே

பொழிப்புரை

சூரியனின் ஒளி போன்று பரந்த இடத்தில் எங்கும் ஒன்று போன்று அனைத்து உயிர்களுக்கும் உடனிருந்து கருணை புரிபவனும், சந்திரனின் ஒளி படிப்படியாக வளர்வது போன்று உயிர்களின் பக்குவ நிலைக்கு ஏற்ப அவற்றின் ஞானத்தை படிப்படியாக வளரச் செய்பவனும், சந்திரனைத் தனது சடையில் சூடியவனும், தனது ஐந்து தொழில்களையும் சிரமமோ அல்லது பெரிய முயற்சியோ தேவைப்படாமல், நினைத்த மாத்திரத்தில் விளையாட்டாகச் செய்பவனும் ஆகிய அரத்துறை இறைவன் தன்னிடத்தில் அன்பு கொள்ளும் அடியார்களின் மனதினில் பால் சுரப்பதுபோன்று சுரக்கின்றான். இத்தகைய பண்புகள் கொண்ட சிவபெருமானை அன்புடன் காணுங்கள். அவனைத்தான் நாம் தொழுகின்றோம்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.