32. பனைக்கை மும்மத வேழம் - பாடல் 8
பிற்காலச் சோழர்களின் வழியில் வந்த பராந்தகச் சோழன் காலத்தில் சிதம்பரத்தில் பொற்கூரை வேயப்பட்டதாக சோழர்களின் சரித்திரத்தில் கூறப்படுகின்றது. பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி,
பாடல் 8
முழுதும் வானுலகத்து உள தேவர்கள்
தொழுதும் போற்றியும் தூய செம்பொன்னினால்
எழுதி மேய்ந்த சிற்றம்பலக் கூத்தனை
இழுதையேன் மறந்து எங்ஙனம் உய்வனோ

விளக்கம்

பிற்காலச் சோழர்களின் வழியில் வந்த பராந்தகச் சோழன் காலத்தில் சிதம்பரத்தில் பொற்கூரை வேயப்பட்டதாக சோழர்களின் சரித்திரத்தில் கூறப்படுகின்றது. பொன்னியின் செல்வன் நாவலில் கல்கி, இராஜராஜச் சோழனின் பாட்டனார் கண்டாராதித்த சோழரைப் பற்றி குறிப்பிடுகின்றார். கண்டராதித்த சோழர் தான் அருளிய திருவிசைப்பா பதிகத்தில் பராந்தகச் சோழன் தில்லை பொன்னம்பலத்தின் கூரையினை பொன்னால் வேய்ந்ததை குறிப்பிடுகின்றார்.

வெங்கோல் வேந்தன் தென்னன் நாடும் ஈழமும் கொண்ட திறல்
செங்கோல் சோழன் கோழி வேந்தன் செம்பியன் பொன்னணிந்த
அங்கோல் வளையார் பாடி ஆடும் அணி தில்லை அம்பலத்துள்
எங்கோன் ஈசன் எம் இறையை என்று கொள் எய்துவதே

அப்பர் பிரானின் காலம் கண்டாரதித்த சோழர் காலத்திற்கு, சுமார் முன்னூறு ஆண்டுகள் முந்தையது. மகேந்திர பல்லவன் மற்றும் நரசிம்ம பல்லவன் காலத்தில் வாழ்ந்தவர் அப்பர் பிரான். எனவே பராந்தகச் சோழன் காலத்திற்கு முன்னமே, தில்லை அம்பலத்தின் கூரை பொன்னால் வேயப்பட்டது என்பது அப்பர் பிரானின் இந்த பாடலிலிருந்து புலனாகின்றது. பராந்தகச் சோழனின் காலத்தில், பொன் பூச்சு புதிப்பிக்கப்பட்டு இருக்கலாம் என்று இதனால் நாம் ஊகம் செய்யலாம். கோயில் புராணத்திலும் (சிதம்பரத்தின் தல வரலாறு), இரண்யவர்மன் என்ற வடநாட்டு கெளட தேசத்து இளவரசன், தொழு நோயால் பீடிக்கப்பட்டு இருந்தமையால் அரசாளத் தகுதியற்றவன் என்று கருதப்பட்டான். தனது நோய்க்குத் தீர்வு காணும் முயற்சியில் அவன் ஒவ்வொரு தலமாக யாத்திரை செய்தபோது, தில்லை நகரம் வந்தடைந்தான்: அப்போது வியாக்ரபாத முனிவர் அவனை தில்லைப் பெருமானை வேண்டி குணம் பெறுமாறு ஆலோசனை கூறினார் அவனும் அவ்வாறே நடராஜப் பெருமானை வழிபட்டு குணம் அடைந்தான். அவன் வடநாடு செல்லாமல், இங்கேயே தங்கி தில்லையைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டான் என்றும் அப்போது அவன் அம்பலத்திற்கு பொற்கூரை வேய்ந்தான் என்றும் கோயில் புராணம் கூறுகின்றது. .

பொழிப்புரை

விண்ணில் உள்ள தேவர்கள், தில்லை அம்பலத்துக் கூத்தனை தொழுது போற்றி வணங்குகின்றார்கள். மேலும் தேவர்கள் அம்பலத்துக் கூரையினை தூய பொன்னினால் வேய்ந்து அழகு செய்துள்ளார்கள். இவ்வாறு தேவர்களால் பெருமைப்படுத்தப்பட்ட சிவபெருமானை, குற்றங்கள் உடைய அடியேன் மறந்தால் நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன். எனவே நான் எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன்.

Advertisement