முகப்பு
தினம் ஒரு தேவாரம்

32. பனைக்கை மும்மத வேழம் - பாடல் 9

கார்க் காலத்தில் பூக்கும் அழகிய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும், இறுக்கமாக மார்பினில் கச்சினை அணிந்துள்ள பார்வதி தேவியின் மணாளனும், தில்லையின் வீதிகளில் தேரினில்

Updated On : 28 ஜூலை, 2016 at 4:04 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:35 PM

பாடல் 9

காருலா மலர்க் கொன்றை அம் தாரணை
வாருலா முலை மங்கை மணாளனைத்
தேர் உலாவிய தில்லையுள் கூத்தனை
ஆர்கிலா அமுதை மறந்து உய்வனோ

விளக்கம்

ஆர்கிலா = உண்ண உண்ணத் தெவிட்டாதது. காருலா மலர் = கார்க் காலத்தில் பூக்கும் கொன்றை மலர்கள். அம் தாரன் = அழகிய மாலையை அணிந்தவன். தார் = மாலை. இறைவனை அமுதம் என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுவது நமக்கு மணிவாசகரின் திருவாசகப் பாடல்களை நினைவூட்டும். சிவபுராணத்தில் மணிவாசகர், சிவபெருமானை ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே என்று அழைக்கின்றார். மேலும் பிடித்தபத்து பதிகத்தின் மூன்றாவது பாடலில் அன்பினில் விளைந்த ஆரமுது என்று இறைவனை குறிப்பிடுகின்றார். சிவபெருமான் நமக்கு ஆரமுதமாக இனிக்கவேண்டும் என்றால், நாம் சிவபிரான் பால் அன்பு கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தும் முகமாக அன்பினில் விளைந்த ஆரமுது என்று இங்கே மணிவாசகர் கூறுகின்றார். .

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும் புழுத்தலைப் புலையனேன் தனக்கு
செம்மையே ஆய சிவபதம் அளித்த செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன் எங்கு எழுந்து அருளுவது இனியே

பொழிப்புரை

கார்க் காலத்தில் பூக்கும் அழகிய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும், இறுக்கமாக மார்பினில் கச்சினை அணிந்துள்ள பார்வதி தேவியின் மணாளனும், தில்லையின் வீதிகளில் தேரினில் உலா வருபவனும் ஆகிய தில்லைக் கூத்தனும் உண்ணவுண்ணத் தெவிட்டாத அமுதம் போன்று இனிப்பவனும் ஆகிய சிவபெருமானை, மறந்தால் நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன். எனவே நான் எப்பொழுதும் அவரை நினைத்தவாறே இருப்பேன்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.