முகப்பு
தினம் ஒரு தேவாரம்

32. பனைக்கை மும்மத வேழம் - பாடல் 3

தனது கையில் பாம்பினைச் சுற்றிக் கட்டிக்கொண்டு இருப்பவனும், கையில் கபாலத்தையும் மான் கன்றினைனையும் ஏந்தியவனும், முற்றூழிக் காலத்தில் மிகவும் விருப்பத்துடன்,

Updated On : 28 ஜூலை, 2016 at 3:12 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:32 PM

பாடல் 3

கட்டும் பாம்பும் கபாலம் கை மான் மறி
இட்டமா இடுகாட்டு எரி ஆடுவான்
சிட்டர் வாழ் தில்லை அம்பலக்கூத்தனை
எட்டனைப் பொழுதும் மறந்து உய்வனோ

விளக்கம்

எட்டனைப் பொழுது = மிகவும் சிறிய பொழுது. எள், தினை போன்ற தானியங்கள் அளவில் மிகவும் சிறியவை. மிகவும் சிறிய நேரம், விநாடிக்கும் குறைந்த நேரம் என்பதை உணர்த்தும் பொருட்டு தினைத்தனைப் பொழுதும், எட்டனைப் பொழுதும் என்று அப்பர் பிரான் இந்த பதிகத்தில் கூறுகின்றார். ச்ரேஷ்டர் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு சிட்டர் ஆகும்.

பொழிப்புரை

தனது கையில் பாம்பினைச் சுற்றிக் கட்டிக்கொண்டு இருப்பவனும், கையில் கபாலத்தையும் மான் கன்றினைனையும் ஏந்தியவனும், முற்றூழிக் காலத்தில் மிகவும் விருப்பத்துடன், சுடுகாட்டில் ஊழித்தீயின் இடையே கூத்து ஆடுபவனும், ஒழுக்கத்திலும் கல்வியிலும் சிறந்தவர்கள் வாழும் தில்லை நகரத்தில் உள்ள அம்பலத்தில் கூத்தாடுபவனும் ஆகிய சிவபெருமானை எள் போன்று சிறிய நேரத்தில் மறந்தாலும் நான் வாழ்வில் உய்வினை அடையமாட்டேன். எனவே எப்பொழுதும் நான் அவரை நினைத்தவாறே இருப்பேன்,

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.