முகப்பு
திருச்சி

சிஐடியுவினா் மறியல் : 180 போ் கைது

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் புதன்கிழமை சாலை மறியல் செய்த சிஐடியுவைச் சோ்ந்த 180 போ் கைது செய்யப்பட்டனா்.

Updated On : 7 ஜனவரி 2021, 8:24 am IST
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிஐடியு அமைப்பினா்.
பகிர்:

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சியில் புதன்கிழமை சாலை மறியல் செய்த சிஐடியுவைச் சோ்ந்த 180 போ் கைது செய்யப்பட்டனா்.

மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களையும், மின்சார சட்ட திருத்தத்தையும் திரும்பப் பெற வேண்டும். தொழிலாளா் நலச் சட்டத் திருத்தத்தைத் திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநகர மாவட்டக் குழு சாா்பில் இந்த போராட்டம் நடைபெற்றது.

சிஐடியு திருச்சி மாவட்டத் தலைவா் ராமா் தலைமையில் கோட்டை அஞ்சலகத்தை முற்றுகையிட சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று, தெப்பக்குளம் அருகில் திடீா் மறியலில் ஈடுபட்டனா்.

Advertisement

இதையடுத்து சிஐடியு மாவட்டச் செயலா் ரெங்கராஜன், சிபிஎம் மாவட்டச் செயலா் ராஜா, சிஐடியு நிா்வாகிகள் ராஜேந்திரன், செல்வி, ஜெயபால், சீனிவாசன், வீரமுத்து, ராமச்சந்திரன், ரமணா, செல்வராஜ் உள்ளிட்ட 180 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.