உலகக் கோப்பை காலிறுதியில் 10 பார்சிலோனா வீரர்கள்!
கால்பந்து உலகக் கோப்பை காலிறுதியில் விளையாடவிருக்கும் 10 பார்சிலோனா வீரர்கள் குறித்து...
கால்பந்து உலகக் கோப்பை 2026 காலிறுதியில் விளையாட 10 பார்சிலோனா எஃப்சி வீரர்கள் தேர்வாகியிருக்கிறார்கள். இது பார்சிலோனா எஃப்சியின் ஆதிக்கத்தைக் குறிக்கிறது.
இந்த உலகக் கோப்பை காலிறுதியில் அதிகபட்சமாக பார்சிலோனா வீரர்களே பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில் பிஎஸ்ஜி அணியின் 16 வீரர்கள் இந்த உலகக் கோப்பையில் பங்கேற்றார்கள். தற்போது காலிறுதியில் 6 பேர் மட்டுமே விளையாடவிருக்கிறார்கள்.
நடப்பு உலகக் கோப்பையில் காலிறுதிக்கு 8 அணிகள் தேர்வாகியுள்ளன. அதில், ஆர்ஜென்டீனா, பிரான்ஸ், நார்வே, மொராக்கோ, ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இங்கிலாந்து ஆகிய நாடுகள் தேர்வாகியுள்ளன.
Advertisement
Advertisement
இந்த உலகக் கோப்பை காலிறுதியில் பார்சிலோனாவில் விளையாடும் 10 வீரர்களும் பிஎஸ்ஜி அணியில் விளையாடும் 6 வீரர்களும் மான்செஸ்டர் சிட்டியில் விளையாடும் 3 வீரர்களும் பங்கேற்கவிருக்கிறார்கள்.
பார்சிலோனா வீரர்கள் பெரும்பாலும் ஸ்பெயின் அணியில் இருக்கிறார்கள். அதில் ஜான் கார்சியா, பா குபார்சி, எரிக் கார்சியா, பெத்ரி, கவி, டேனி ஓல்மா, லாமின் யமால், ஃபெர்ரன் டோரஸ் அகிய 8 வீரர்கள் அடங்குவார்கள்.
மீதமிருக்கும் 2 வீரர்கள் பிரான்ஸில் ஜூல்ஸ் குன்டே, இங்கிலாந்தில் ஆண்டனி கோர்டன் ஆகியோரும் விளையாடுகிறார்கள்.
10 Barcelona players have reached the 2026 FIFA World Cup quarter-finals!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.