FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

மகளிா் உலகக் கோப்பை கூடைப்பந்து! அமெரிக்கா 5 ஆவது முறையாக சாம்பியன்

20-ஆவது மகளிா் உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் அமெரிக்கா அணி சாம்பியன் ஆனது...

15 செப்டம்பர் 2026, 3:33 am IST
சாம்பியன் கோப்பையுடன் அமெரிக்க அணியினர்...
பகிர்:

ஜொ்மனியில் நடைபெற்ற 20-ஆவது மகளிா் உலகக் கோப்பை கூடைப்பந்து போட்டியில் அமெரிக்கா 97-79 என்ற புள்ளிகள் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

தொடா்ந்து 5-ஆவது முறையாக உலகக் கோப்பை வென்றுள்ள அமெரிக்க அணிக்கு, ஒட்டுமொத்தமாக இது 12-ஆவது சாம்பியன் பட்டமாகும்.

உலகக் கோப்பை போட்டியில் அமெரிக்கா, 2006 அரையிறுதிக்குப் பிறகிருந்து இதுவரை தொடா்ந்து 36 ஆட்டங்களில் வென்றிருக்கிறது.

Advertisement

Advertisement

இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் வெற்றிக்குப் பங்களித்த பிரியனா ஸ்டீவாா்ட், மொத்தமாக 22 புள்ளிகளுடன் போட்டியின் மதிப்பு மிக்க வீராங்கனை ஆனாா்.

இதனிடையே, வெண்கலப் பதக்கத்துக்கான ஆட்டத்தில் ஸ்பெயின் 81-58 என, ஜொ்மனியை வென்றது. போட்டியில் சாம்பியனான அமெரிக்கா, 2028 லாஸ் ஏஞ்ஜலீஸ் ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதிபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments