முகப்பு
செய்திகள்

தனுஷின் ஓம் திரைப்படத்தில் இணைந்த நஸ்ருதின் ஷா!

நடிகர் நஸ்ருதின் ஷா ஓம் திரைப்படத்தில் இணைந்தார்...

Updated On : 9 ஜூலை 2026, 11:38 am IST
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியுடன் நடிகர் நஸ்ருதின் ஷா
பகிர்:

நடிகர் தனுஷின் ஓம் திரைப்படத்தில் நஸ்ருதின் ஷா இணைந்துள்ளார்.

நடிகர் தனுஷின் 55 ஆவது படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். ஓம் என பெயரிட்டுள்ள இந்தப் படத்தை தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

வில்லனாக நடிகர் மம்மூட்டியும் நாயகிகளாக நடிகைகள் சாய் பல்லவி, ஸ்ரீலீலாவும் நடிக்கும் இப்படம், அக்டோபர் 16 ஆம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், பிரபல பாலிவு நடிகர் நஸ்ருதீன் ஷா இணைந்துள்ளதை போஸ்டர் வெளியிட்டுத் தெரிவித்துள்ளனர். நஸ்ருதீன் ஷா தமிழில் ஹே ராம் திரைப்படத்தில் மகாத்மா காந்தியாக நடித்திருந்தார். தற்போது, நீண்ட காலம் கழித்து தனுஷ் திரைப்படத்தின் மூலம் தமிழில் நடிக்க உள்ளார்.

Naseeruddin Shah has joined the cast of actor Dhanush's film Om.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments