FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

நள்ளிரவில் வெளியான தனுஷின் ஓம் படத்தின் டிரைலர்..! டிரெண்டிங்கில் முதலிடம்!

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படத்தின் டிரைலர் குறித்து...

17 வினாடிகள் முன்பு
டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த ஓம் டிரைலர் - படங்கள்: எக்ஸ் / வுன்டர்பார் ஃபிலிம்ஸ்
பகிர்:

நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஓம் திரைப்படத்தின் டிரைலர் நள்ளிரவில் வெளியானது. யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

நடிகர் தனுஷ் நாயகனாக நடித்துள்ள ஓம் திரைப்படத்தை அமரன் பட இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தை தனுஷின் வுன்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் ஆர்டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன.

Advertisement

Advertisement

இந்தப் படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நஸ்ரூதின் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளதால், படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

சாய் அபயங்கர் இசையில் வெளியான ‘அலாக்கா லோவா’, ‘வீழா வீரா’ மற்றும் ஃபா... ஃபா.. மூன்று பாடல்களும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

ஓம் திரைப்படம் நவ. 20 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் வெள்ளிக்கிழமை (நவ. 13) மாலை 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் நள்ளிரவில் வெளியானது.

யூடியூப் டிரெண்டிங்கில் இந்த டிரைலர் முதலிடம் பிடித்துள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தின் தலைப்பு ‘ஓம் சேப்டர் 1: உதிரம் தி ப்ளட் வுட்’ ( OM CHAPTER: 1 UDHIRAM THE BLOOD WOOD) என்று முதலில் வெளியான நிலையில், தணிக்கைக் குழு பிரச்சினைகளால், ’ஓம்: ஆபரேஷன் மோல்’ (O.M OPERATION MOLE) என்று தலைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

summary

Dhanush’s 'Om' trailer released at midnight..! Takes the top spot on YouTube trending!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.