ஓம் வெளியீடு ஒத்திவைப்பு... தனுஷுக்கு நன்றி தெரிவித்த சூர்யா!
சீன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா பேசியிருப்பதாவது...
சீன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூர்யா தனக்காக ஓம் படத்தினை ஒத்திவைத்த தனுஷுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
சூர்யா நடிப்பில் மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கியுள்ள சீன் படத்தை சூர்யாவின் ழகரம் ஸ்டூடியோஸ் என்கிற புதிய தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.
நாயகியாக நஸ்ரியா, வில்லனாக நஸ்லென் நடித்துள்ள இப்படத்திற்கு சுசின் ஷ்யாம் இசையமைத்துள்ளார். முன்னதாக வெளியான இரு பாடல்கள் மற்றும் கிளிம்ஸ் காட்சிகள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
Advertisement
Advertisement
இப்படத்தின், டிரைலர் மற்றும் பாடல்கள் நேற்று இரவு 7.30 மணிக்கு வெளியானது. சீன் திரைப்படம் தீபாவளி வெளியீடாக நவம்பர் 6 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
முன்னதாக தனுஷின் ஓம் படமும் தீபாவளிக்கு வெளியாக இருந்தது. ஆனால், சூர்யா மற்றும் ரஜினி படங்களுக்காக தனது படத்தை ஒத்திவைப்பதாக தனுஷ் அறிவித்திருந்தார்.
இந்த நிலையில், இது குறித்து சூர்யா டிரைலர் வெளியீட்டு விழாவில், “நடிகர் தனுஷுக்கும் நன்றி சொல்ல வேண்டும். அவரது ட்வீட் ஒன்றில் எங்களது படம் தீபாவளிக்கு வெளியாவதால் ஓம் படத்தை ஒத்திவைப்பதாகக் கூறியிருந்தார். அதற்கு நன்றி” எனக் கூறியுள்ளார். இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
'Om' release postponed... Suriya thanks Dhanush!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.