மதுரை நகைக்கடை திருட்டு! ஸ்கூட்டியில் வந்த திருடன்.. சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு!பாகிஸ்தான் உளவாளியின் ஒரு படத்துக்கு ஒரு ரகசிய ஆவணம் பகிர்ந்த விமானப் படை அதிகாரி!ரயில்வே படுக்கை விரிப்பு காகித உறைகளில் மீண்டும் காணாமல்போன தமிழ்!அயலக உயர்கல்வி மாணவர்களுக்கான உதவித்தொகை விடுவிப்பில் தாமதம் இல்லை! அரசு விளக்கம்விவாதத்திற்கு மோடி வரட்டும்; உண்மையான தேச விரோதி யார் என்று காட்டுகிறேன்! ராகுல்பெங்களூர் இளஞ்சிவப்பு மெட்ரோ வழித்தடத்தை தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி!அதிவேகமாகப் பரவி வரும் புதிய வகை கரோனா! இப்படி ஒரு அறிகுறியா?ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ். கர்ணன் காலமானார்!நவ.16ல் உருவாகிறது அக்வான் புயல்!தமிழகம் முழுவதும் நூலகங்களில் இருந்து 70,674 போலி நூல்கள் அகற்றம்!சட்டம் - ஒழுங்கு பிரச்னை: அமித் ஷாவிடம் அறிக்கை அளித்தார் தமிழக ஆளுநர் ஆர்லேகர்!

ஹார்ட் பீட் நாயகி தீபா பாலு நடிக்கும் புதிய க்ரைம் த்ரில்லர் திரைப்படம்!

ஹார்ட் பீட் நாயகி தீபா பாலுவின் புதிய திரைப்படம் குறித்து...

Heart Beat fame Deepa Balu

ஹார்ட் பீட் நாயகி தீபா பாலு - படம்: இன்ஸ்டா / தீபா பாலு

Updated On :

ஹார்ட் பீட் நாயகி தீபா பாலுவின் புதிய திரைப்படம் ’ஸ்டேஷன் - ஹண்ட் ஃபார் சர்வைவல்’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றுள்ளது. இதில் நாயகனாக அஜய் கார்த்தி நடிக்கிறார்.

ஹார்ட் பீட் இணையத் தொடரின் முதல் பாகம், இரண்டாம் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை அடுத்து மூன்றாம் பாகமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

அறிமுக இயக்குநர் மாறன் கார்த்திகேயன் இயக்கத்தில் இந்தப் பயம் உருவாக இருக்கிறது. ஒரே இரவில் நடக்கும் த்ரில்லர் கதையாக இந்தப் படம் உருவாக இருக்கிறது.

இந்தப் படத்தில் ரொமான்ஸ், க்ரைம், ஆக்‌ஷன் கலந்த கதையாக உருவாக இருக்கிறது. இதில் நாயகனாக காளிதாஸ் 2, டார்க் படங்களில் அசத்திய அஜய் கார்த்திக் நாயகனாகவும் தீபா பாலு நாயகியாகவும் நடிக்கிறார்கள்.

கேபி இன்ஃபோடெயின்மென்ட் சார்பாக கே தினேஷ் குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். இந்தப் படத்தில் வெங்கடேஷ், தினேஷ் பிராபகர், ரமேஷ் திலக், அனு ஸ்ரீ வேலன், சப்பானி பாய்ஸ் முரளி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படத்தின் முக்கியமான காட்சிகள் சுமார் 70 சதவிகிதம் காவல் நிலையத்தில் நடைபெறுவது போல படமாக்கப்படவிருக்கிறது. அதற்காக செட் ஒன்றையும் சென்னையில் அமைத்துள்ளார்கள்.

சுபாஷ் பாரதி ஒளிப்பதிவு செய்ய, அருண் ராஜ் இசையமைக்கவிருக்கிறார். தீபா பாலுவின் இந்தப் படத்தின் அறிவிப்பால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

Summary

Ajay Karthi, Heart Beat fame Deepa Balu to headline single-night thriller Station

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.