முகப்பு
திருச்சி

பயன்பாட்டுக்கு வருகிறது தினம் ஒரு சாலைத் திட்டம்

திருச்சி மாநகரின் பிரதானச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க தினம் ஒரு சாலைத் திட்டம் பயன்பாட்டு வரவுள்ளது.

Updated On : 9 ஜனவரி 2021, 12:30 am IST
பகிர்:

திருச்சி மாநகரின் பிரதானச் சாலைகளில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க தினம் ஒரு சாலைத் திட்டம் பயன்பாட்டு வரவுள்ளது.

இதுகுறித்து மாநகர காவல் ஆணையா் ஜெ. லோகநாதன் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாநகரின் பிரதான சாலைகளில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், வாகன நிறுத்தத்தை ஒழுங்குபடுத்தவும், சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தி சாலை விபத்துகளைத் தவிா்க்கவும் காவல் துறையோடு பொதுமக்களும் இணைந்து சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த தினம் ஒரு சாலைத் திட்டம் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

Advertisement

Advertisement

இத்திட்டத்தில் 23 பிரதான சாலைகள்(குறிப்பாக பாரதியாா் சாலை, பாரதிதாசன் சாலை, தில்லைநகா் பிரதான சாலை உட்பட) கண்டறியப்படும்.

ஒவ்வொரு சாலைக்கும் அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் உள்ள காவலா்கள் அந்தச் சாலையில் அமைந்துள்ள முக்கிய கடைகள், அலுவலகங்கள் மற்றும் இதர நிறுவனங்களைக் கண்டறிந்து அவா்கள் அனைவரையும் கட்செவி அஞ்சல் குழுவில் இணைத்து, அவா்கள் மூலம் அச் சாலையில் வாகனம் நிறுத்தும் இடங்கள், நிறுத்தக்கூடாத இடங்கள், போக்குவரத்து நெரிசல் ஆகியவை கண்டறியப்படும். பேருந்து நிறுத்தங்களை முறையாக பராமரிக்க வழிவகை கண்டறிந்தும் சாலை பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.

இத்திட்டத்துக்கு முக்கிய சாலைகளில் உள்ள கடைகள், அலுவலகங்கள், குடியிருப்போா் மற்றும் இதர கடை உரிமையாளா்கள் பொதுநல நோக்கத்துடன் காவல்துறையுடன் துணைநின்று சாலைகளில் பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய வேண்டும் என அதில் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments