முகப்பு
செய்திகள்

முத்தைய்யா படத்தின் சண்டைக் காட்சிகளுக்குத் தயாராகும் அருண் விஜய்!

நடிகர் அருண் விஜய்யின் புகைப்படம் கவனம் பெற்று வருகிறது.

Updated On : 6 ஜூலை 2026, 4:56 pm IST
அருண் விஜய்
பகிர்:

இயக்குநர் முத்தைய்யா திரைப்படத்திற்காக நடிகர் அருண் விஜய் கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

நடிகர் அருண் விஜய் இறுதியாக நடித்த ரெட்ட தல திரைப்படம் மோசமான விமர்சனங்களைப் பெற்று தோல்விப்படமானது. விரைவில், இவர் நடிப்பில் உருவான பார்டர் திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, இயக்குநர் முத்தைய்யா இயக்கத்தில் அருண் விஜய் தன் 38-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஆக்‌ஷன் பின்னணியில் உருவாகிறது. நாயகியாக நடிகை மிர்ணா மேனன் நடிக்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், திருநெல்வேலியில் படமாக்கப்படும் சண்டைக் காட்சிகளுக்காக கட்டுமஸ்தான தோற்றத்திற்கு மாறிய புகைப்படத்தை அருண் விஜய் வெளியிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

முத்தையா தன் மகனை வைத்து இயக்கிய சுள்ளான் சேது திரைப்படமும் வெளியீட்டிற்குத் தயாராகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Actor Arun Vijay has transformed into a muscular physique for Director Muthaiah's film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments