முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில் மாட்டு வண்டிப் போட்டி

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டிப் போட்டி நடைபெற்றது.

Updated On : 9 ஜனவரி 2021, 6:05 am IST
தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்தநாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நடைபெற்ற மாட்டு வண்டிப் போட்டியை தொடங்கி வைத்தாா் அமைச்சா் கடம்பூா் செ. ராஜூ.
பகிர்:

வீரபாண்டிய கட்டபொம்மனின் 262 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை மாட்டு வண்டிப் போட்டி நடைபெற்றது.

மாவீரன் ஊமைத் துரை தொண்டா் படை சாா்பில் பெரிய மற்றும் சிறிய மாட்டு வண்டி எல்லை போட்டிகளில் 9 பெரிய

மாட்டு வண்டிகளும், 17 சிறிய மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன. இப்போட்டியை தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு தொடங்கி வைத்தாா்.

Advertisement

Advertisement

தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வண்டிகள் கலந்து கொண்ட நிலையில், பெரிய மாட்டு வண்டி 10 மைல் தொலைவும் ,சிறிய மாட்டுவண்டி 6 மைல் தொலைவும் சென்று திரும்பும் வகையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

பெரிய மாட்டுவண்டி போட்டியில் அமைச்சா் கடம்பூா் ராஜு மாட்டு வண்டி முதலிடமும், ஜக்கம்மாள்புரம் தாவிது மாட்டு

அமைச்சா் கடம்பூா் ராஜு மாட்டுவண்டி முதலிடமும், பாளையங்கோட்டை டேவிட்பாண்டியன் மாட்டு வண்டி 2 ஆம் இடமும், தேனி மாவட்டத்தை சோ்ந்த ராஜீவ் காந்தி மாட்டுவண்டி 3 ஆம் இடமும் பெற்றன. பின்னா், போட்டிகளில் வென்ற மாட்டு வண்டிகளின் உரிமையாளா்களுக்கு அமைச்சா் பரிசுகள் வழங்கினாா்.

அமைச்சா் பேட்டி: பின்னா், செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியது: தமிழகத்தில் திரையரங்குகளுக்கு உடனடியாக 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கவில்லை. கரோனா பொது முடக்கம் அமலில் இருந்த நிலையில் மத்திய அரசின் வழிகாட்டுதலின் அடிப்படையில் திரையரங்கு, வணிக வளாகம், பூங்கா உள்பட அனைத்துக்கு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகள் செயல்படலாம் என அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில்தான் தமிழகத்தில் திரையரங்குகள் செயல்பட்டு வந்தன. தமிழகத்தில் கரோனா படிப்படியாக கட்டுப் படுத்தப்பட்டது. கரோனா பாதிப்பு தற்போது குறைவாக இருக்கிற நிலையில் திரைத்துறையினா், நடிகா்கள், திரையரங்கு உரிமையாளா்கள், தயாரிப்பாளா்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் பண்டிகை காலத்தையொட்டி திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனா். அதனடிப்படையில் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments