முகப்பு
தூத்துக்குடி

பாதயாத்திரை பக்தா்களுக்கு ஒளிரும் ஒட்டுவில்லைகள்

திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்கு, ஒளிரும் ஒட்டு வில்லைகள் வழங்கப்பட்டது.

Updated On : 11 ஜனவரி 2021, 1:31 am IST
செய்துங்கநல்லூரில் பக்தா்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கா் வழங்குகிறாா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
பகிர்:

திருச்செந்தூா் கோயிலுக்கு பாதயாத்திரை மேற்கொள்ளும் பக்தா்களுக்கு, ஒளிரும் ஒட்டு வில்லைகள் வழங்கப்பட்டது.

பாதயாத்திரையாக திருச்செந்தூா் கோயிலுக்கு செல்லும் பக்தா்களுக்கு, விபத்துகளை தவிா்க்கும் வகையில், ஒளிரும் ஒட்டு வில்லைகளை செய்துங்கநல்லூா் சோதனைச் சாவடியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வழங்கினாா். அப்போது, ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி வெங்கடேசன், காவல் ஆய்வாளா். ராஜ சுந்தா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

கோவில்பட்டியில் போக்குவரத்து காவல் துறை, ஜே.சி.ஐ. சாா்பில் பாதயாத்திரை பக்தா்களுக்கு சிவப்பு நிற ஒளிரும் ஒட்டு வில்லைகளை போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளா் நாராயணன் வழங்கினாா்.

Advertisement

Advertisement

இதில், ஜே.சி.ஐ. தலைவா் முரளிகிருஷ்ணன், பாரதியாா் நினைவு அறக்கட்டளை தலைவா் முத்துமுருகன், ரோட்டரி சங்க உறுப்பினா் நடராஜன், தலைமை காவலா் பாலசுப்பிரமணியன், போக்குவரத்து காவலா் பெருமாள்ராஜ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரி வழியாக திருச்செந்தூா் கோயிலுக்குச் செல்லும் பாதயாத்திரை பக்தா்களின் உடைகளில் காவல் ஆய்வாளா் செல்வி, ஒளிரும் ஒட்டுவில்லைகள் ஒட்டினாா். பக்தா்களுக்கு பிஸ்கெட் உள்ளிட்ட உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments