ஹாரி கேன் இரட்டை 2 கோல் அடித்து அசத்தல்: காங்கோவை வீழ்த்தி இங்கிலாந்து வெற்றி!
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் காங்கோ அணியை இங்கிலாந்து வீழ்த்தியதைப் பற்றி...
உலகக்கோப்பை கால்பந்து தொடரின் ரவுண்ட் ஆஃப் 32 சுற்றில் காங்கோ அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் கடந்த ஜூன் 11 ஆம் தேதி தொடங்கிய பிஃபா உலகக் கோப்பையின் 23-வது தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் ரவுண்ட் ஆஃப் 32-ல் அணிகள் மிகவும் தீவிரம் காட்டி வருகின்றன.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் அட்லாண்டா திடலில் நேற்றிரவு நடந்த போட்டியில் முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து மற்றும் காங்கோ அணிகள் மோதின.
Advertisement
Advertisement
ஆட்டம் தொடங்கிய 7-வது நிமிடத்திலே காங்கோ அணியி வீரர் பிரையன் சிபெங்கா, முதல் கோலை போட்டு இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சியளித்தார். இதனால், போட்டியின் முதல் பாதியில் 0-1 என காங்கோ முன்னிலை பெற்றது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியால் முதல் போட்டியில் பதில் கோல் போட முடியவில்லை.
முதல் பாதியில் விட்டதைப் பிடிக்கும் முனைப்பில் 2-வது பாதியில் இங்கிலாந்து அணி அதிரடியாக விளையாடியது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரர் ஹாரி கேன் 75-வது நிமிடத்தில் கோல் போட்டு, 1-1 என்ற கணக்கில் சமன் பெற்றது.
அதைத்தொடர்ந்து தீவிரம் காட்டிய ஹாரி கேன் 86-வது நிமிடத்தில் இரண்டாவது கோலைப் போட்டு அசத்தினார். இதனால், 2-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருந்தது. ஹாரி கேன் ஹாட்ரிக் அடிப்பார் என்றும், காங்கோ அணி பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசி வரை இரண்டுகளும் வேறு கோல்கள் எதுவும் அடிக்கவில்லை.
இங்கிலாந்து அணி வருகிற ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ரவுண்ட் ஆஃப் 32 போட்டியில் மெக்சிகோ அணியை எதிர்கொள்ளவிருக்கிறது.
Harry Kane rescued England from a seismic World Cup shock with two late goals to beat the Democratic Republic of the Congo 2-1 in Atlanta and secure a place in the last 16.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.