முகப்பு
கிரிக்கெட்

முதல் வெற்றிக்கு காத்திருக்கும் ஷ்ரேயாஸ்! இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி மழையால் ரத்து!

இங்கிலாந்து - இந்தியா மோதிய முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளதைப் பற்றி...

Updated On : 2 ஜூலை 2026, 9:08 am IST
முதல் டி20 போட்டி மழையால் ரத்து.
பகிர்:

இங்கிலாந்து - இந்தியா அணிகள் நேற்றிரவு மோதிய முதல் டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் போட்டி செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் நேற்றிரவு நடைபெற்றது.

இந்தத் தொடரின் முதல் போட்டியிலும் இந்திய அணியின் இளம் வீரர் சூர்யவன்ஷிக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங் செய்வதாகத் தெரிவித்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் களமிறங்கினர்.

Advertisement

Advertisement

அயர்லாந்து தொடர் போலவே இந்தத் தொடரின் முதல் போட்டியில் சோபிக்காத சஞ்சு சாம்சன் 7 பந்துகளில் 1 ரன் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ரன் ஏதுமின்றி வெளியேற, அபிஷேக் சர்மா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் இவரும் சேர்ந்து ஸ்கோரை உயர்த்தினர். இவரும் சேர்ந்து மூன்றாவது விக்கெட்டுக்கு 82 ரன்கள் சேர்த்த நிலையில், அபிஷேக் சர்மா 6 பௌண்டர்கள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அவரைத் தொடர்ந்து ஷ்ரேயாஸ் ஐயர் 6 பௌண்டர்கள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 68 ரன்கள் எடுக்க, திலக் வர்மா 23 ரன்களில் பெவிலியன் திரும்பினார். கடைசி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே, 21 பந்துகளில் 2 பௌண்டர்கள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார். ஹர்ஷித் ராணா ரன் ஏதுமின்றியும், அக்‌ஷர் பட்டேல் 3 ரன்களிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.

இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில், 7 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. இரண்டாவது ஆட்டத்தின் பாதியில் மழை குறுக்கிட்டது. தொடர்ந்து போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

இவ்விரு அணிகள் மோதும் இரண்டாவது போட்டி மான்செஸ்டர், எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் திடலில் வருகிற ஜூலை 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

summary

ENG vs IND, 1st T20I: Abhishek Sharma's blistering 59 and Shreyas Iyer's fluent 68 powered India to 189 for 7 in the opening T20I against England, but persistent rain prevented the hosts from beginning their chase in Durham.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments