முகப்பு
வேலூர்

1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On : 7 ஜனவரி 2021, 12:00 am IST
பகிர்:

குடியாத்தம்: போ்ணாம்பட்டு அருகே வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், வேலூா் பறக்கும் படை வட்டாட்சியா் கோட்டீஸ்வரன் தலைமையில் வருவாய்த் துறையினா் போ்ணாம்பட்டு ஓங்குப்பம் சாலையில் உள்ள ஏசான்பாய் (60) வீட்டில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, வீட்டில் 23 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, குடியாத்தத்தை அடுத்த பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசு நுகா்பொருள் வாணிபக் கிடங்கில் ஒப்படைத்தனா்.

Advertisement

ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்த ஏசான்பாய் மீது நடவடிக்கை எடுக்க வேலூா் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.