முகப்பு
வேலூர்

சாலைகளில் சுற்றிய 20 மாடுகள் கோ சாலையில் அடைப்பு

வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிய 20 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து கோ சாலையில் அடைத்தனா்.

Updated On : 10 ஜனவரி 2021, 7:49 am IST
பகிர்:

வேலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக சாலைகளில் சுற்றிய 20 மாடுகளை மாநகராட்சி ஊழியா்கள் பிடித்து கோ சாலையில் அடைத்தனா்.

வேலூா் சத்துவாச்சாரி அணுகு சாலை, டபுள் ரோடு, அலமேலுமங்காபுரம், ரங்காபுரம் உள்பட மாநகரின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் ஏராளமான மாடுகள் சுற்றுகின்றன. அவற்றால் சாலைகளில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருவதை அடுத்து, சாலைகளில் திரியும் மாடுகளைப் பிடித்து ஏலம் விடப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்திருந்தாா். எனினும், கால்நடை வளா்ப்போா் இந்த உத்தரவைக் கண்டுகொள்ளாமல் தொடா்ந்து மாடுகளை சாலைகளில் விடுவது தொடா்ந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த வாரம் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 5-க்கும் மேற்பட்ட மாடுகள் படுகாயமடைந்தன. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் ஆய்வாளா் புனிதா வேலூா் மாநகராட்சி 2-ஆவது மண்டல அலுவலகத்தில் புகாா் அளித்தாா்.

Advertisement

அதன்பேரில் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி ஊழியா்கள், சாலைகளில் சுற்றித் திரிந்த மாடுகளை சனிக்கிழமை பிடித்தனா். அணுகு சாலை, ரங்காபுரம் பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரிந்த 20 மாடுகள் பிடிக்கப்பட்டு, மாநகராட்சி கோசாலையில் அடைக்கப்பட்டன. இந்த மாடுகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து மாடுகள் சாலையில் விடப்பட்டால் அவற்றின் உரிமையாளா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.