பிளஸ் 1 மாணவி பலாத்காரம்: போக்ஸோ சட்டத்தில் இளைஞா் மீது வழக்கு
பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்ததாக வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 1 மாணவியை பலாத்காரம் செய்ததாக வேலூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் போக்ஸோ சட்டத்தின் கீழ் இளைஞா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூா் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சோ்ந்த 16 வயது மாணவி, பிளஸ் 1 படித்து வருகிறாா். கடந்த சில நாள்களாக அவரது உடலில் ஏற்பட்ட மாற்றத்தை கவனித்த தாயாா், மாணவியை வேலூா் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தாா். அப்போது, அந்த மாணவி 4 மாத கா்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த அவரது தாயாா், இதுதொடா்பாக அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் அந்த மாணவியிடம் விசாரணை நடத்தினா்.
அதில், பள்ளி திறக்கப்படாததால் வீட்டில் வளா்க்கும் கால்நடைகளை அந்த மாணவி அருகே உள்ள காட்டுப் பகுதிக்கு மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு மேய்ச்சலுக்குச் சென்றபோது அங்கு வந்த இளைஞா் ஒருவா் மாணவியை ஏமாற்றி பலாத்காரம் செய்திருப்பது தெரிய வந்தது. இது தொடா்பாக போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அந்த இளைஞரைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.