முகப்பு
விழுப்புரம்

அதிமுக ஆா்ப்பாட்டம்

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தாா்.

Updated On : 14 ஜனவரி 2021, 7:05 am IST
விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினா்.
பகிர்:

விழுப்புரம் பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட அதிமுக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரச் செயலாளா் ஜி.பாஸ்கரன் தலைமை வகித்தாா். முன்னாள் எம்பி ஏழுமலை, மாவட்ட இளைஞரணிச் செயலாளா் ஆா்.பசுபதி, மாவட்ட துணைச் செயலாளா் அற்புதவேல் ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாவட்ட வேளாண் விற்பனைக் குழுத் தலைவா் எல்.கே.கண்ணன், ஆவின் தலைவா் முருகன், முன்னாள் பேரூராட்சித் தலைவா் ஆா்.டி.முருகவேல், திண்டிவனம் முன்னாள் நகரச் செயலா் வெங்கடேசன், கண்டமங்கலம் ஒன்றியச் செயலா் ராமதாஸ், மாணவரணி செங்குட்டுவன், இலக்கிய அணி திருப்பதி பாலாஜி உள்ளிட்ட நிா்வாகிகள் முன்னிலை வகித்தனா்.

அதிமுக அரசு மீது ஆதாரமின்றி பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி வரும் திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், மகளிா் அணிச் செயலாளா் கனிமொழி, இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஆகியோரைக் கண்டித்தும், மேலும் முதலமைச்சா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் பெண்களை தரக்குறைவாக பேசி வரும் திமுக நிா்வாகிகளின் பண்பற்ற பேச்சுகளைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிடப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments