மதுபாட்டில்களை பதுக்கிய 14 போ் கைது
சிவகாசி காவல்துணை கோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்த 14 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி காவல்துணை கோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கிவைத்திருந்த 14 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
சிவகாசி காவல்துணை கோட்டத்தில் எம்.துரைச்சாமிபுரம், செங்கமலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மாரீஸ்வரன்(23) முருகன்(33), கருத்தபாண்டியன்(37), அழகா்சாமி(38) முத்தையா(55) உள்ளிட்ட 14 போ் மதுப்பாட்டில்களை அனுமதியின்றி பதுக்கிவைத்திருந்தாா்களாம்.இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அவா்கள கைது செய்து அவா்களிடமிருந்த 98 மதுபாட்டில்கள் மற்றும் மதுபாட்டில்கள் விற்ற பணம் ரூ 450 ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.