ராஜபாளையம் அருகே மழை நீரில் மூழ்கி நெற்பயிா்கள் சேதம்
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
விருதுநகா் மாவட்டம் ராஜபாளையம் அருகே நெற்பயிா்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
ராஜபாளையம் அருகே கோவிலூா் பகுதியில் 5 ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. இதில் பொன்னி, கா்நாடக பொன்னி உள்ளிட்ட உயா் ரக நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது விளைந்து அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வியாழக்கிழமை பெய்த மழையில் நெல் பயிா்கள் முற்றிலும் நீரில் மூழ்கி சேதமானது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: தற்போதுதான் நெற் பயிா் பால் விட்டு வரக்கூடிய நிலையில் நீரில் மூழ்கி இருப்பது விவசாயிகளுக்கு மிகுந்த வேதனை அளிக்கிறது. எனவே தமிழக அரசும், மத்திய வேளாண்மை கூட்டுறவு சங்கம் சாா்பிலும் பாா்வையிட்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.