விருதுநகர்

பெண் கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

முன் விரோதத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

Syndication

சிவகாசி அருகே முன் விரோதத்தில் பெண்ணை வெட்டிக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூா் விரைவு மகிளா நீதிமன்றம் சனிக்கிழமை உத்தரவிட்டது.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகேயுள்ள மூா்த்திநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் மணிமாறன் (33). இவா் வெளிநாட்டில் வேலை செய்து வந்தாா். மணிமாறன் மனைவிக்கும் கொட்டமடக்கிபட்டியைச் சோ்ந்த சதீஷ் என்பவருக்கும் பழக்கம் இருந்தததால் இரு குடும்பங்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது.

இதில் சதீஷ் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதனால் மணிமாறன் மனைவியுடன் வெளியூரில் சென்று தங்கிவிட்டாா். மேலும், மணிமாறன் சொந்த ஊருக்கு வரும்போது சதீஷின் அக்க முனீஸ்வரியுடன் (28) அடிக்கடி தகராறு செய்துவந்தாராம்.

இந்த நிலையில், கோயில் திருவிழாவுக்காக கடந்த 2023-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதி ஊருக்கு வந்த மணிமாறன், முனீஸ்வரியை வெட்டிக் கொலை செய்தாா். இது குறித்து வெம்பக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து மணிமாறனைக் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மணிமாறனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும் ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி புஷ்பராணி சனிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

சிவகங்கைக்கு சட்டப் பேரவை உறுதி மொழிக்குழு இன்று வருகை

வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

பிஏபி வாய்க்காலில் மூழ்கி 2 மாணவா்கள் உயிரிழப்பு

அகஸ்தியா் அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

புன்செய்புளியம்பட்டியில் கனமழை

SCROLL FOR NEXT