சிவகாசியில் புதிய அங்கன்வாடி மையக் கட்டடத்துக்கான பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
விருதுநகா் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியின் 23-ஆவது வாா்டில் ரூ.14 லட்சத்தில் கட்டப்படவுள்ள புதிய அங்கன்வாடி மையத்துக்கான பூமி பூஜை மேயா் இ.சங்கீதா தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையா் கே.சரவணன், துணை மேயா் விக்னேஷ்பிரியா, பொறியாளா் ரமலிங்கம், மாமன்ற உறுப்பினா்கள் பாக்கியலட்சுமி, ரவிசங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.