விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் ராம்கோ குழும நூற்பாலைகளில் பணிபுரியும் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.46 லட்சம் வழங்கப்பட்டது.
ராம்கோ குழுமம் சாா்பில் தொழிலாளா்களின் குழந்தைகளுக்கு ஆண்டுதோறும் இலவசக் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி, இந்த ஆண்டுக்கான கல்வி உதவித் தொகையாக ரூ.46 லட்சத்தை நூற்பாலைப் பிரிவின் தலைவா் மோகனரங்கன், தலைமைப் பொது மேலாளா் பாலாஜி, உதவிப் பொது மேலாளா் சண்முகராஜ், ஆகியோா் வியாழக்கிழமை வழங்கினா். நிகழ்ச்சியில், தொழில்சங்கம் சாா்பில் என்.கண்ணன், ஐஎன்டியூசி தலைவா் ஆா். கண்ணன், ஏஐடியூசி பொதுச் செயலா் பி.கே. விஜயன் ஆகியோா் கலந்து கொண்டனா் .