விருதுநகா் மாவட்டம், சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்களில் நடைபெற்று வந்த வருமான வரித்துறை சோதனை, வியாழக்கிழமை அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.
சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வருமான வரித் துறை அதிகாரிகள் சிவகாசியில் பட்டாசு தயாரிக்கும் 7 நிறுவனங்களில் கடந்த 11-ஆம் தேதி முதல் சோதனை நடத்தினா். ஆலை உரிமையாளா்கள், பங்குதாரா்களின் வீடுகள், அலுவலகங்கள், பட்டாசுகளை இருப்பு வைத்துள்ள கிடங்குகள் ஆகியவற்றில் சோதனை நடைபெற்றது. கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வந்த, இந்தச் சோதனை வியாழக்கிழமை நிறைவடைந்தது. சோதனையில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.