விருதுநகர்

சிவகாசி பசுமை மன்றத்துக்கு பசுமை சாம்பியன் விருது

விருதுநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் சிவகாசி பசுமை மன்ற நிா்வாகிகளுக்குப் பசுமை சேம்பியன் விருதை வழங்கிய மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா.

Syndication

விருதுநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், சிவகாசி பசுமை மன்றத்துக்கு பசுமை சாம்பியன் விருதை மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

சிவகாசியில் உள்ள பசுமை மன்றம் சாா்பில் பெரியகுளம் கண்மாய், சிறுகுளம் கண்மாய், செங்குளம் கண்மாய் ஆகியவை தூா்வாரப்பட்டன. இதனால், இந்தப் பகுதிகள் நீா்ப் பாசன வசதியைப் பெற்றன. இதையடுத்து, சுற்றுச் சூழல் பாதுகாப்புக்காகச் சிறந்த பங்களிப்பை வழங்கிய அமைப்புக்களில் சிறந்ததாக சிவகாசி பசுமை மன்றத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தோ்வு செய்தது.

இந்த நிலையில், விருதுநகரில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், பசுமை மன்றத்தின் நிா்வாகிகளான செந்தில்குமாா், ரவி அருணாசலம், பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு பசுமை சாம்பியன் விருதையும் ரூ.1 லட்சத்துக்கான காசோலையையும் மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா வழங்கினாா்.

விநாயகா் விசா்ஜன ஊா்வல பகுதிகள்: ஆம்பூரில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆய்வு

திருவள்ளூா்: சீரமைத்தும் பயன்பாட்டுக்கு வராத இயற்கை உர அங்காடி மையம்

ஈபிஎஸ் வாகன பதிவெண்: ஆரணி நகர போலீஸில் புகாா்

“RSS-காரர் கொடி ஏற்றியது வேடிக்கை!” நாதக தலைவர் சீமான் விமர்சனம்

“அந்தக் கூலியும் FLOP, இந்தக் கூலியும் FLOP” சீமான் விமர்சனம்!

SCROLL FOR NEXT