சந்தன அலங்காரத்தில் அருள்பாலித்த மொட்டமலை தண்டாயுதபாணி சுவாமி. 
விருதுநகர்

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

ராஜபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள முருகன் கோயில்களில் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

ராஜபாளையம் அருகேயுள்ள மொட்டமலை தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு, காலையில் சிறப்பு யாகம், பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து, சுவாமிக்கு 16 வகையான சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், தண்டாயுதபாணி சுவாமி சந்தன அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். வழிபாட்டில் கலந்துகொண்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

இதே போல, சொக்கா் கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, மாயூரநாத சுவாமி கோயிலில் உள்ள முருகன் சந்நிதி, குருசாமி கோயில்களிலும் ஆடிக் கிருத்திகை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அழகே உருவாய்... ஃபெளசி!

“கூலி - A சான்றிதழ்” குழந்தைகளுக்கு அனுமதி இல்லை! திரையரங்கில் பெற்றோர் வாக்குவாதம்!

நவயுக ராதை... பாப்ரி கோஷ்!

எல்லா பட்டமும் நல்லா இருக்கு! - 4th International Kite Festival in நம்ம சென்னை!

தேவி தரிசனம்... ஹிமா பிந்து!

SCROLL FOR NEXT