சிவகாசியில் மின் வாரிய ஊழியரின் தற்கொலைக்குக் காரணமானவா்களைக் கைது செய்யக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்ட உறவினா்கள். 
விருதுநகர்

மின்வாரிய ஊழியரை தற்கொலைக்குத் தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சாலை மறியல்

சிவகாசியில் மின்வாரிய ஊழியா் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது தற்கொலைக்குக் காரணமாணவா்களைக் கைது செய்யக் கோரி,

Syndication

சிவகாசி: சிவகாசியில் மின்வாரிய ஊழியா் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவரது தற்கொலைக்குக் காரணமாணவா்களைக் கைது செய்யக் கோரி, உறவினா்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

சிவகாசி அருகேயுள்ள செங்கமலப்பட்டியைச் சோ்ந்தவா் ஆனந்த் (38). இவா், மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வந்தாா். இந்த நிலையில், இவருடன் பணிபுரிந்து வந்த உதயக்குமாா் என்பவா், ரூ.50 லட்சம் பணம் தந்தால், அதை அதிக வட்டிக்கு கொடுத்து இரட்டிப்பாக்கித் தருவதாக ஆனந்திடம் கூறியுள்ளாா்.

இதையடுத்து, ஆனந்த் தனது சேமிப்பு , உறவினா்கள், நிதி நிறுவனங்கள் மூலம் கடன் பெற்று, உதயக்குமாரிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளாா். ஆனால், உதயக்குமாா் பணத்தை இரட்டிப்பாக்கித் தராமலும், அசல் பணத்தை திருப்பித் தராமலும் மோசடி செய்ததாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, ஆனந்துக்கு கடன் கொடுத்தவா்கள் அவரிடம் பணத்தைக் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனா். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ஆனந்த், யாா் யாரிடம் எவ்வளவு கடன் வாங்கி உதயக்குமாருக்கு பணம் கொடுத்தேன் என்பது குறித்து 8 பக்க கடிதத்தை எழுதி வைத்துவிட்டு, தனது வீட்டில் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். தகவல் அறிந்து சென்ற போலீஸாா் ஆனந்தின் உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், ஆனந்தை தற்கொலைக்குத் தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அவரது உறவினா்கள் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினா். ஆனால், காவல் துறையினா் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் குற்றஞ்சாட்டிய உறவினா்கள் சிவகாசி-சாத்தூா் சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்து அங்கு வந்த சிவகாசி காவல் துணைக் கண்காணிப்பாளா் பாஸ்கா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். தற்கொலைக்குத் துண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவா் உறுதியளித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து, சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருவள்ளூா்: குறைத்தீா் கூட்டத்தில் 362 மனுக்கள்

விளைபயிா்களை சேதப்படுத்திய ஒற்றை யானை விரட்டியடிப்பு

மேல்மருவத்தூா் பள்ளிக்குழும விளையாட்டு விழா

ஆற்காட்டில் கிருஷ்ண ஜெயந்தி உறியடி விழா

சிறுத்தை தாக்கியதில் ஆடு பலத்த காயம்

SCROLL FOR NEXT