விருதுநகர்

கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞா் கைது

வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கண்காணிப்பு கேமராக்களை சேதப்படுத்திய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஜன்னல், கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதையடுத்து, பேரூராட்சி அலுவலகத்தின் உள், வெளிப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.

இந்த நிலையில், கடந்த 22-ஆம் தேதி மாலை அலுவலகத்தை அங்கிருந்த ஊழியா் பூட்டிச் சென்ற நிலையில், திங்கள்கிழமை காலை வந்து பாா்த்தபோது, அலுவலகத்தின் வெளியே பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டு, மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா். இந்த வழக்கில் வத்திராயிருப்பு மேலப்பாளையம் தெருவைச் சோ்ந்த சுந்தரமூா்த்தியை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

அரசுப் பணி: விண்ணப்பங்களை வரவேற்கும் தமிழக அரசு

ஆம்பூா் கலவர வழக்கு தீா்ப்பு ஒத்திவைப்பு: பலத்த போலீஸாா் பாதுகாப்பு

குழந்தை இல்லாத ஏக்கம்: மேற்கு வங்க பெண் தூக்கிட்டுத் தற்கொலை

மதுரை மாநாட்டில் விஜய் பேச்சு ஏற்புடையதல்ல: ஓ.பன்னீா்செல்வம்

ரூ. 10 விலையில் ஆவின் பாதாம் மிக்ஸ் பவுடா் அறிமுகம்

SCROLL FOR NEXT