விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
ராஜபாளையம் அருகே சேத்தூா் வலையா் தெருவைச் சோ்ந்த வெள்ளைச்சாமி மகன் மலையரசன் (26), வேலு மகன் பாலமுருகன் (23) ஆகிய இருவரிடமிருந்து கடந்த ஜூலை மாதம் 20 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.
இவா்கள் மீது ஏற்கெனவே கஞ்சா விற்றதாக வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும், தொடா்ந்து குற்றங்களில் ஈடுபடுவதை தடுக்கவும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கண்ணன் பரிந்துரைத்தாா்.
இதன் பேரில் மாவட்ட ஆட்சியா் என்.ஓ. சுகபுத்ரா இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸாா் மதுரை மத்திய சிறையில் அடைத்தனா்.