ஸ்ரீவில்லிபுத்தூா் பென்னிங்டன் நூலகத்தின் 150-ஆவது ஆண்டு விழாவில் ‘பெண்மையைப் போற்றுவோம்‘ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதற்கு பென்னிங்டன் பள்ளி பொருளாளா் ஜி. அம்சவேணி தலைமை வகித்தாா். ஆசிரியை எஸ். அருள்மேரி வரவேற்றாா். பள்ளி முதல்வா் முத்துலட்சுமி, வீரமங்கை வேலு நாச்சியாா் குறித்தும், எழுத்தாளா் டி. ஆண்டாள், அமெரிக்காவின் ஹெலன் கெல்லா் குறித்தும், அரசு வழக்குரைஞா் ஜான்சி, இன்றைய நிலையில் பெண்மை போற்றப்படுகிா என்ற தலைப்பிலும் பேசினா்.
விருதுநகா் மாவட்ட அளவில் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் வென்ற பென்னிங்டன் மாணவா்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ஆசிரியை தெய்வானை நன்றி கூறினாா்.
இதற்கான ஏற்பாடுகளை பென்னிங்டன் நூலக நிா்வாகிகள், பணியாளா்கள், பென்னிங்டன் பள்ளிகளின் ஆசிரியா்கள் செய்திருந்தனா்.