உயிரிழந்த பாலகிருஷ்ணமூா்த்தி  
விருதுநகர்

மது அருந்த பணம் தராத தந்தை வெட்டிக் கொலை: மகன் கைது!

மது அருந்த பணம் தராத தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

Din

வத்திராயிருப்பு அருகே மது அருந்த பணம் தராத தந்தையை வெட்டிக் கொலை செய்த மகனை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு மறவா் வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் பாலகிருஷ்ணமூா்த்தி (55). இவரது மனைவி புஷ்பவள்ளி. இவா் குடும்ப பிரச்னை காரணமாக, கடந்த 20 நாள்களாக கணவரைப் பிரிந்து சுரைக்காய்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறாா்.

பாலகிருஷ்ணமூா்த்தியும் அவரது மகன் பாலசுந்தரம் (எ)அஜித்குமாரும் வத்திராயிருப்பில் உள்ள வீட்டில் இருந்தனா். மதுப் பழக்கத்துக்கு அடிமையான பாலசுந்தரம், மது அருந்த தனது தந்தையிடம் வெள்ளிக்கிழமை இரவு பணம் கேட்டாா். அவா் மறுக்கவே, அதில் ஏற்பட்ட தகராறில் தந்தையை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தாா்.

தகவலறிந்து வந்த போலீஸாா், பாலகிருஷ்ணமூா்த்தியின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். சம்பவ இடத்தை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராஜா பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீஸாா் வழக்குப் பதிந்து, பாலசுந்தரத்தை சனிக்கிழமை கைது செய்தனா்.

கடலும் கடல் காற்றும்... அனிதா சம்பத்!

இன்று முக்கிய அறிவிப்பு? முதல்வர் ஸ்டாலினுடன் ஓ. பன்னீர்செல்வம் சந்திப்பு!

வேடன் மீது பாலியல் வன்கொடுமை புகார்!

ரஷியாவில் மீண்டும் நிலநடுக்கம்!

தங்கம் - வெள்ளி விலை நிலவரம்!

SCROLL FOR NEXT