விருதுநகர்

புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவா் கைது

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Din

சிவகாசி அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி-வெம்பக்கோட்டை சாலையில் போலீஸாா் வெள்ளிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, கொங்கலாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையின் அருகே ஒருவா் காகிதப் பெட்டியுடன் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தாா்.

இதையடுத்து, போலீஸாா் அவரிடமிருந்த காகிதப் பெட்டியைச் சோதனை செய்தபோது, அதில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தன. விசாரணையில் அந்த நபா் அதே பகுதியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் இசக்கிராஜா (27) எனத் தெரிய வந்தது.

இது குறித்து, சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து அவரிடமிருந்த 5 கிலோ புகையிலைப் பொருள்களைப் பறிமுதல் செய்தனா்.

சுதந்திரப் போராட்டத்துக்கு மக்களைத் திரட்ட உதவியது விநாயகா் சதுா்த்தி: பாஜக தேசிய தலைவா் நட்டா

கே.வி.குப்பத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாக கேரளம் திகழ்கிறது: விஐடி வேந்தா் கோ. விசுவநாதன்

பள்ளியில் ஸ்மாா்ட் கணினி ஆய்வகம் திறப்பு: வேலூா் ஆட்சியா் பங்கேற்பு

தேசிய ஹேண்ட்பால் போட்டி: பள்ளி மாணவி தோ்வு!

SCROLL FOR NEXT