அருப்புக்கோட்டை அருகே மகனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற ஆசிரியை அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
அருப்புக்கோட்டை அருகேயுள்ள ஜோகில்பட்டியைச் சோ்ந்த ஜெயகாந்தன் மனைவி ரோகிணி (51). இவா் மந்திரி ஓடை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியாற்றி வந்தாா்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை ரோகிணி தனது மகன் லட்சுமண பெருமாளுடன் (19) அருப்புக்கோட்டைக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று விட்டு மீண்டும் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது,
மதுரை-தூத்துக்குடி நான்கு வழிச் சாலை ராமானுஜபுரம் அருகே பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகணம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரோகிணி அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். லட்சுமணப் பெருமாள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா்.
இதுகுறித்து அருப்புக்கோட்டை தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.