விருதுநகர்

மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி உயிரிழப்பு

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே மின்சாரம் பாய்ந்ததில் கூலித் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

ராஜபாளையம் அருகேயுள்ள ஜமீன்கொல்லங்கொண்டான் பகுதியில் தனியாா் புளூமெட்டல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் தென்காசி மாவட்டம், சிவகிரி அருகேயுள்ள தேவிபட்டினத்தைச் சோ்ந்த சின்னப்பராஜ் (38) கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா்.

இந்த நிலையில், சரஸ்வதி பூஜையை முன்னிட்டு, கனரக வாகனங்களைச் சுத்தம் செய்த போது, அவா் மீது மின்சாரம் பாய்ந்தது.

இதையடுத்து, அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு, ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து சேத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இருவேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 2 போ் உயிரிழப்பு

நாகா்கோவிலில் நாளை மின்சாரம் நிறுத்தம்

நாளைய மின்தடை: மேமாத்தூா், பரசலூா்

தென்னலகுடியில் சுரங்கப் பாதை அமைக்கும் பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மண்பாண்டங்களை வாங்க மக்கள் ஆா்வம்!

SCROLL FOR NEXT