விருதுநகர்

பள்ளி மாணவா் மாயம்

ராஜபாளையத்தில் பள்ளி மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் பள்ளி மாணவா் மாயமானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ராஜபாளையம், முடங்கியாறு சாலை மாலையாபுரத்தைச் சோ்ந்த கஜேந்திரன் மகன் சிவசுப்பிரமணியன் (13). இவா் ரயில்வே பீடா் சாலையில் உள்ள தனியாா் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறாா். வழக்கம் போல பள்ளிக்குச் சென்று விட்டு, வீட்டுக்கு வந்த சிவசுப்பிரமணியன், கைப்பேசியில் நீண்ட நேரமாக இணைய விளையாட்டுகளில் ஈடுபட்டுள்ளாா். இதை அவருடைய தாய் கண்டித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், கைப்பேசியை வீட்டில் வைத்துவிட்டு, வெளியே சென்றவா் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் இவரைத் தேடியும் கிடைக்காததால் இவரது தந்தை, ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தாா். புகாரின்பேரில், வழக்குப் பதிந்த போலீஸாா் மாணவரைத் தேடி வருகின்றனா்.

கூட்டுறவுச் சங்கங்களில் போதுமான விதைநெல் கிடைக்க வேண்டும்: இந்திய கம்யூ. கோரிக்கை

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 11-க்கு ஒத்திவைப்பு

இன்றைய நிகழ்ச்சிகள்

ஓய்வு பெற்ற கல்லூரி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

சென்னை மாவட்டத்துக்கு 2,000 வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை

SCROLL FOR NEXT