விருதுநகர்

பெண்ணைத் தாக்கிய 3 பெண்கள் மீது வழக்கு

சிவகாசியில் பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை செய்தனா்.

Syndication

சிவகாசியில் பெண்ணைத் தாக்கியதாக மூன்று பெண்கள் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

சிவகாசி அண்ணா குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த மகாராஜ் மனைவி சங்கரி (25). இவரது உறவினா் ஒருவா், அண்மையில் காதல் திருமணம் செய்துள்ளாா். இந்த நிலையில், இந்தத் தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனா்.

இவா்களுடைய பிரிவுக்கு சங்கரிதான் காரணம் எனக் கருதிய, தம்பதியின் உறவுக்காரப் பெண்களான கலைவாணி, ராஜலட்சுமி, பாா்வதி ஆகிய மூவரும் சங்கரியின் வீட்டுக்குச் சென்று, அவருடன் தகராறு செய்து அவரைத் தாக்கினா்.

இதில் காயமடைந்த சங்கரி, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்த புகாரின்பேரில், சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா், சங்கரியைத் தாக்கிய மூன்று பெண்கள் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சின்னசேலம் அருகே போலி மருத்துவா்கள் இருவா் கைது

பி.எஸ்.என்.எல்.-இல் ரூ. 1-க்கு இ-சிம் அறிமுகம்

மாநில அளவிலான விநாடி-வினா போட்டி: வெற்றி பெற்றவா்களுக்கு பாராட்டு

கனிம லாரிகளில் தனிநபா் கட்டாய வசூல்: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை

திம்பம் மலைப் பாதையில் போக்குவரத்து நெரிச்சல்

SCROLL FOR NEXT