சிவகாசி அருகே கட்டடத் தொழிலாளியைத் தாக்கிய 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்கள்.
சிவகாசி அருகேயுள்ள ஏ.துலுக்கபட்டியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி முருகேசன் (42). இவரது மனைவி காா்த்தீஸ்வரி. இவா்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனா். அண்மையில், குடும்பப் பிரச்னை காரணமாக காா்த்தீஸ்வரி அதே பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம். இதையடுத்து, முருகேசன், தனது மனைவியை அழைத்து வர மாமனாா் வீட்டுக்கு வியாழக்கிழமை சென்றாா். அப்போது அங்கிருந்த, காா்த்தீஸ்வரியின் தங்கை செல்வி, அவரது கணவா் முத்தையா, உறவினா்கள் பாண்டிசெல்வம், அருண் ஆகிய நான்கு பேரும் முருகேசனுடன் தகராறு செய்து அவரைத் தாக்கினா். இதில் காயமடைந்த முருகேசன் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இது குறித்த புகாரின் பேரில் மாரனேரி காவல் நிலைய போலீஸாா் நான்கு போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.