சிவகாசியில் சாலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சிவகாசி மாரியம்மன் கோயில் அருகே சாலையில் சுமாா் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் வியாழக்கிழமை கிடந்துள்ளது. தகவல் அறிந்த போலீஸாா், சாலையில் கிடந்த சடலத்தைக் கைப்பற்றி, கூறாய்வுக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது குறித்து சிவகாசி கிழக்கு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.