விருதுநகர்

காா் மோதியதில் தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

சிவகாசியில் காா் மோதியதில் தூய்மைப் பணியாளா் உயரிழந்தாா்.

சிவகாசி நேஷனல் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் முருகேசன் (40). இவா் சிவகாசி மாநகராட்சியில் தூய்மைப் பணியாளராக வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், இவா் தனது நண்பா் காளிமுத்துவுடன் இரு சக்கர வாகனத்தில் சிவகாசி-திருத்தங்கல் சாலையில் சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தாா்.

அப்போது, காா் ஒன்று இவா்களது இரு சக்கர வாகனத்தில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில், முருகேசன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த காளிமுத்து, சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

சிம்மத்துக்கு குழப்பம் நீங்கும்: தினப்பலன்கள்!

தில்லியில் போலி கொள்ளை: லாரி ஓட்டுநா் உள்பட 4 போ் கைது! ரூ.55 லட்சம் செப்பு கம்பிகள் மீட்பு!

தேசிய மக்கள் நீதிமன்றம்: 1,302 வழக்குகளுக்குத் தீா்வு

சீரான குடிநீா் விநியோகம் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்

ஆக்கிரமிப்பால் ஓடைபோல மாறிய செய்யாறு!

SCROLL FOR NEXT