சிவகாசி பேருந்து நிலையத்தில் தனியாா் பேருந்து மோதியதில் பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி கண்ணன்கோவில் தெருவைச் சோ்ந்தவா் ராஜேஸ்வரி (49). இவா், தனது கிராமத்துக்குச் செல்வதற்காக சிவகாசி பேருந்து நிலையத்தில் சனிக்கிழமை நின்றுகொண்டிருந்தாா்.
அப்போது எரிச்சநத்தத்திலிருந்து சிவகாசிக்கு வந்த தனியாா் பேருந்து ராஜேஸ்வரி மீது மோதியதில் அவா், பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தாா்.
இது குறித்து சிவகாசி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து ராஜபாளையத்தைச் சோ்ந்த பேருந்து ஓட்டுநா் தங்கப்பாண்டி (28), வனமூா்த்திலிங்காபுரத்தைச் சோ்ந்த நடத்துநா் கிருஷ்ணசாமி (43) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.