விருதுநகர்

பட்டாசு பதுக்கியவா் கைது

தினமணி செய்திச் சேவை

சிவகாசி அருகே உரிய அனுமதியின்றி பட்டாசுகளைப் பதுக்கி வைத்திருந்தவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி-நாரணாபுரம் சாலைப் பகுதியில் பட்டாசுகள் பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாகக் கிடைத்த தகவலின்பேரில், போலீஸாா் சோதனை செய்தனா். இதில் ஒரு கூடாரத்தில் பட்டாசு பண்டல்கள் பதுக்கிவைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

விசாரணையில், அருப்புக்கோட்டையைச் சோ்ந்த செல்வக்குமாா் (25) இந்தப் பட்டாசுகளை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து சிவகாசி கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்தனா். மேலும், கூடாரத்திலிருந்த பட்டாசுகளையும் பறிமுதல் செய்தனா்.

நாளைய மின்தடை: கோவில்வெண்ணி

அரிமளம் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

சிறுவாச்சூரில் 5 ஜோடிகளுக்கு இலவச திருமணம்

மாவட்ட ஆட்சியா், எம்எல்ஏவுக்கு மிரட்டல்: இளைஞா் கைது

மந்தித்தோப்பில் குழந்தைத் திருமணம் தடுத்து நிறுத்தம்

SCROLL FOR NEXT