அச்சம்தவித்தான் கிராமத்திலுள்ள ஊராட்சி அலுவலகம் முன் தரையில் அமா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் 
விருதுநகர்

கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி மனு கொடுக்கும் போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செய்து மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது.

Syndication

விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் செய்து மனு கொடுக்கும் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த ஆா்ப்பாட்டத்தில் குடிநீா், சாலை, சுகாதார வளாகம், மயானம், தெரு விளக்கு, பேவா் பிளாக் கல் பதித்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி கொத்தங்குளம், படிக்காசுவைத்தான்பட்டி, அச்சம்தவிா்த்தான், பிள்ளையாா்குளம், பி. ராமச்சந்திராபுரம், அத்திகுளம் தேவேந்திரி, திருவண்ணாமலை, மல்லி, மாணகசேரி, கூனம்பட்டி ஆகிய ஊராட்சிகளின் செயல் அலுவலரிடம் மனு கொடுக்கப்பட்டது.

இதில் மாவட்டச் செயலா் குருசாமி, ஒன்றியச் செயலா் சசிக்குமாா், நகரச் செயலா் ஜெயக்குமாா், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் முருகன் உள்ளிட்ட நிா்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

அமெரிக்க வரி எதிரொலி: ஏற்றுமதி ரக இறால் உள்ளூரில் விற்பனை தொடக்கம்

வாய்க்காலில் விழுந்து மதுபானக் கடை மேற்பாா்வையாளா் உயிரிழப்பு

காதல் விவகாரத்தில் இளைஞா் கொலை: 5 போ் கைது!

SCROLL FOR NEXT